அதிபரின் வாழ்த்துச் செய்தி
தி/கந்/அல்-தாரிக் மகாவித்தியாலயம்
கந்தளாய் மண்ணின் அடையாளச்சின்னமாகத் திகழ்ந்து கலை ஒளி பரப்பும் அல்-தாரிக் மகா வித்தியாலயத்தினது இணைளத்தள அறிமுகமானது புதுப் பொலிவுடன் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.மருத நிலமாய் மணம் பரப்பும் கந்தளாயின் எதிர்கால சமூகத்தலைவர்களையும் ,ஆற்றல் மிக்க அறிஞர் பெருந்தகைகளையும், புத்தி ஜீவிகளையும் ,சமூக முன்னோடிகளையும்உருவாக்குவதில் மிகப்பெரும பந்காற்றும் என்பதில் துளியளவும் ஐயமில்லை.
எமது அல்தாரிக் கலைக்கூடத்தின் கொடியில் பூத்த மாணவ மலர்ச் செல்வங்களின் கல்வி மற்றும் விளையாட்டு உள்ளிட்டஅ கல்விசாரா சாதளைகளையும் அவர்கள் பற்றிய விபரங்களையும் உத்தியோக பூர்வமாக அறிந்து கொள்வதற்கும்எமது பாடசாலையின் கடந்த கால எதிர்கால வரலாற்றையும் பாதுகாப்பதற்கும் இவ்விணையத்தளம் பாரிய பங்காற்றும்.
எமது கலைக்கூடம் பற்றிய தவறான செய்திகளை புறந்தள்ளி ஆதார பூர்வமான செய்திகளை அனைவரும் பெற்றுக் கொள்வதற்கு எமத இணையத்தளச்சேவை வழிவகுக்கும். எமது கலைக்கூடம் பற்றிய தகவல்களை ஒளிவு மறைவு இன்றி வெளிபடுத்துவதோடு கல்லூரியின் வளர்ச்சி கட்ங்களை வெளிகாட்டவும் இச்சேவை வழி செய்யும்.
இச்சேவை சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு சிறந்த பங்களிப்பினை வழங்குவதோடு கல்லூரியின் பெருமையை உலகறியச் செய்ய வல்ல இறைவன் அருள் பாலிப்பானாக எனப் பிரார்த்திக்கின்றேன்.
அதிபர்
தி/கந்/அல்-தாரிக் மகாவித்தியாலயம்.