-
பாடசாலைக்கு சமூகமளித்தல்
-
காலை 7 மணி 20 நிமிடத்துக்கு பாடசாலை ஆரம்பமாகும் எனினும் 15 நிமிடங்களுக்கு முன்னர் மாணவர்களுக்கும் 30 நிமிடங்களுக்கும் முன்னர் மாணவ தலைவர்களும் சமூகமளித்தல் வேண்டும்.
-
காலை 7.20 மணிக்கு பாடசாலையின் பிரதான வாயில் மூடப்படட்டு அதன் பின்னர் வருகை தரும் மாணவர்கள் ஒழுக்காற்று குழுவினரால் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.
-
எச்சரிக்கை மணி ஒலிக்கும் போது அனைத்து மாணவர்களும் வகுப்பறையினுள் இருத்தல் வேண்டும்.
-
அமைதி மணி ஒலிக்கும் போது அனைத்து மாணவர்களும் இருப்பிடத்தில் எழுந்து அமைதியாக இருத்தல் வேண்டும்.
-
பிரார்த்தனை மணி அடிக்கும் போது மாணவர்கள் ஒழுங்கு முறைப்படி பிரார்த்தனை நடைபெறும் இடத்திற்கு அமைதியாக வரிசையில் செல்ல வேண்டும்.அனைவரும் சென்ற பின் பிரார்த்தனை மற்றும் உடற்பயிற்சி போன்ற நிகழவுகள் நடைபெறும் இந்நிகழ்வுகள் முடிவடைந்த பின் ஒழுங்குமுறைப்படி அமைதியாக வரிசையில் தமது வகுப்பறை நோக்கி செல்ல வேண்டும்.
-
பாடசாலை முடிவதற்கு மணி ஒலிக்கும் போது வகுப்பறையில் அனைத்து மாணவர்களும் இருப்பிடத்தில் எழுந்து அமைதியாக இருத்தல் வேண்டும்.
-
பின்னர் பிரார்த்தனை மணியைத் தொடர்ந்து பிரார்த்தனை ஒலிபரப்பப்படும் இதன் போது மாணவர்கள் அமைதியாக நின்று பிரார்த்திக்க வேண்டும்.
-
பிரார்த்தனை முடிவின் போது ஒலிக்கும் மணியைத் தொடர்ந்து ஒழுங்கு முறைப்படி வரிசையில் செல்ல வேண்டும்.
மாணவர் வரவு
வீதியில் செல்லும் நடந்து செல்வோர் போது இடப்பக்கமாக செல்ல வேண்டும்.சக்கிளில் செல்வோர் வலப்பக்கமாகவும் வரிசையாக செல்ல வேண்டும். -
முதலாம் பாடவேளை முடிவடையும் போது வகுப்பாசிரியரால் மாணவர் வரவு இடாப்பில் அடையாளமிடப்படும்.
பாடசாலைக்கு வருகை தராத மாணவர்கள் அதற்கான காரணம் குறிப்பிடப்பட்ட மன்னிப்புக் கடிதத்தை தமது பெற்றோர் பாதுகாவலரிடமிருந்து பெற்று பாடசாலை வருகைதரும் தினத்தில் வகுப்பாசிரியரிடம் கையளிக்க வேண்டும். -
80% க்கு குறைவான வரவுள்ள மாணவர்கள் பரீட்சைகள் இணைப்பாடவிதான செயற்பாடுகள் பாடவிதானதுக்கு புறம்பான செயற்பாடுகள் என்பவற்றில் பங்குபற்றும் தகுதியற்றவர்களாக கருதப்படுவர்.
-
பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்கள் பாடசாலை முடிவடையும் வரை பாடசாலையில் தங்கியிருப்பது கட்டாயமானது.எனினும் சுகவீனம் ஏற்படின் அம்மாணவனால் வேண்டுகோள் கடிதம் எழுதப்பட்டு வகுப்பாசிரியரால் அனுமதிக்கப்பட்ட பின் அதிபர் பிரதி அதிபரிடம் கடிதம் ஒப்படைக்கப்படல் வேண்டும்.
- Home
- பள்ளி பற்றி
- விதிகள்