தற்போது வித்தியாலயமாக விளங்கும் இப்பாடசாலை திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் எனும் சிற்றுரில் பேராறு குடியேற்றத்திட்டத்தின் கீழ் 1968 ஆம் ஆண்டுபேராறு மாணவர்களின் கல்வி சலன் கருதி ஜின்னா கிராம முன்னேற்ற சங்கத்தினால் இனாமாக கட்டி தந்த தற்காலிக கட்டிடத்தை அரசாங்கத்தால் எடுத்து 1968 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி பாடசாலை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இப்பாடசாலையின் அப்போதைய அதிபராக ஜே.எம்.சாதிகீன் பொறுபேற்று பேராறு அரசினர் முஸ்லிம் கலவன்பாடசாலை என பெயரிடப்பட்டது. அதனை தொடர்ந்து நாளடைவில் அல்-தாரிக் வித்தியாலயமாக பெயர் மாற்றம் பெற்றது.பின்னர் 1986-09-9 அம் திகதி அல்-தாரிக் மகா வித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டது.1992-09-23ஆம் திகதி க.பொ.த(உயர்தர) கலைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.
இப்பாடசாலையானது தரம் 1 தொடக்கம் 13 வரை மாணவர்கள் கல்விகற்று வந்த நிலையில் இட வசதியை கருத்திற் கொண்டு 2015-01-01 காலப்பகுதியில் தரம் 1 தொடக்கம் தரம் 5 வரையான மாணவர்களை தனியாக பிரிக்கப்பட்டு வேறு இடம் மாற்றப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை அல்-தாரிக் மகா வித்தியாலயமானது தரம் 6 தொடக்கம் 13 வரையான வகுப்புக்கள் காணப்படுகிறது.
இப் பாடசாலையின் 1995ம் காலப்பகுதியில் எவ்வித விளையாட்டு ஆசிரியர்களும் இல்லாத காலகட்டதில் எமது பாடசாலையிலிருந்து தேசிய மட்டதிலான மெய்வல்லுனர் 100M போட்டியில் எம்.எஸ்.கபார்கான்(ஆசிரியர்) தமிழ் மொழி பாடசாலைகளுல் (கந்தளாய் வலயம்) முதல் முதலாக வெண்கல பதக்கத்தை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்தார்.
2017-01-01 திகதி 1AB பாடசாலையாக தரம் உயர்தப்பட்டதுடன் கல்வி பொதுத்தராதர உயர் தரத்தில் கணித. விஞ்ஞான பிரிவுகளும் ஆரம்பிக்க பட்டது. அத்தோடு 2019ம் ஆண்டு விஞ்ஞான பிரிவில் தோற்றிய மாணவர்களான சு.பஸ்னாஸ் என்ற மாணவியும் சித்தவைத்திய துறைக்கும் 2020ம் ஆண்டு விஞ்ஞான பிரிவில் தோற்றிய மாணவர்ளுள் யு.சு.றுக்ஸானா என்ற மாணவியும் வைத்திய துறைக்கு தெரிவானார்கள் என்பது குறிப்பிடதக்கது.
எனவே இவ்வாறு சிறப்பு மிக்க இப் பாடசாலையில் கிட்டதட்ட அதிபர் உட்பட 35 ஆசிரியர்களும் 4 அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் 2 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களும் 2 அலுவலக சிற்றூளியர்களும் கடமை புறியும் இப்பாடசாலையில் கிட்டதட்ட 600 மாணவர்களை கொண்ட கந்தளாய் வலயத்தின் தமிழ் மொழிமூல பாடசாலைகளுள் அதிகமாணவர்த் தொகையினை கொண்ட பாடசாலையாக “குன்றின் மேல் விளக்காய்” ்ளத் தெளிவாக கந்தளாய் மண்ணில் திகழும் கணிதஇ விஞ்ஞான பிரிவுகொண்ட தமிழ் மொழிப் பாடசாலையாக இப்பாடசாலை மட்டுமே விளங்குகிறது.