தி/அல் - தாரிக் மகா வித்தியாலயம், கந்தளாய்.
பாடசாலைக் கீதம்
அருளுறை பெரியோன் இறை நீயே!
அனுதினம் பணிவோம் உனை நாமே!
அருளுறை பெரியோன் இறை நீயே!
அனுதினம் பணிவோம் உனை நாமே!
இருளுறை எமது அகம் தனிலே!
அறிவொளி தினமும் ஒளிர்ந்திடவே!
நிறை வழியளித்து எமை நீயே!
நிதமும் வாழ அருள்வாயே!
(அருளுறை)
அல் - தாரிக் கலைக் கூடமதில்
அறிவால் உயர்ந்து சிறந்திடவே!
பல்கலை பயின்று பார் மீதில்
பணிகள் புரிய அருள்வாயே!
(அருளுறை)
அறிவுடன் வழுவா ஒழுக்கமதை
அழகுற எமது சிந்தை தனில்
நிறைவுடன் சிலைமேல் எழுத்தெனவே
நிலையாய் உறைய அருள்வாயே!
(அருளுறை)
கவின் மிகு கந்தளாய் நகரின்
கலை எழிற் சுடராம் அல் - தாரிக்
புவிதனில் பொலிவுடன் திகழ்ந்திடவே
புகழுறை இறை நீ அருள்வாயே!
(அருளுறை)